யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், தட்டாதெரு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி பொன்னுச்சாமி அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் பொன்னுச்சாமி அவர்களின் அன்பு மனைவியும், றுபேந்தி, பிரகலாதன், பிரதாபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லோகேந்திரன், நாராயணி, இளங்கோதை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷன், கிரோஷன், தாரிணி, ஷகானா, வைஷ்ணவி, அஜெய்னன், அஜானன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, பொன்னுத்துரை, சின்னம்மா, தியாகராஜா, செல்வராசா(வேலாயுதப்பிள்ளை), அழகரட்ணம் மற்றும் அன்னம்மா, இராசரத்தினம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, தர்மராஜா, சிவகுருநாதன் மற்றும் அரியமலர், செல்வமலர், அருளானந்தம், புஷ்பமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.