

Age: 27 years old | Death Place: Ramavil, Meesalai North, Jaffna, Sri Lanka | Birth place: Chavakachcheri, Jaffna, Sri Lanka
யாழ். சாவகச்சேரி பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு இராமாவில்லைப் வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுமாரன் கஜேன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாக
இருள்அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும்வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து-எங்களை
வாழ வைத்த தெய்வமே!
என்னருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள் ஆத்மா
சாந்தி அடைய எங்கள் இரு கண்ணீர்
மலர் தூவி இறைவனோடு
இணைய வேண்டி அஞ்சலி செய்கின்றோம்!!!