Ownstory Tamil
Age: 73 years old | Death Place: Australia | Birth place: Jaffna
யாழ்.வைரவர் கோவில் றோட், யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.கணேஸ்வரி பத்மநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா நீங்கள் சென்ற பின்,
வீட்டின் ஒவ்வொரு மூலையும் வெறுமையாகி,
நீங்கள் சொன்ன வார்த்தைகள் மட்டுமே
இன்று எனக்கு ஆறுதலாய் நிற்கின்றன.
உங்கள்புன்னகை மறக்க முடியாத சூரியஒளி,
உங்கள் கரம் தொட்ட சுவடுகள் அழியாத நினைவு,
எங்கள் கண்களில் கண்ணீராய் நீயே நிற்கின்றீர்கள்,
எங்கள் இதயத்தில் நித்தமும் நீங்களே வாழ்கின்றீர்கள்.
உன்னின்றி வாழும் நாள்கள்
கண நேரம் போல் போகவில்லை,
எந்தன் உயிரோடு நீங்கள் இருந்தால் தான்
எங்கள் உலகம் முழுமையாய் இருந்திருக்கும்.
அம்மா,
உங்கள் பாசம் எனக்கொரு நிழல்,
உங்கள் நினைவு எனக்கொரு உயிர்,
வாழ்கின்றோம் உங்கள் சுவாசத்தோடு,
நாள்தோறும் உங்கள் பிரிவை ஏங்கியே.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!