Ownstory Tamil

இலங்கை
இராஜதுரை's profile picture
திரு இராஜதுரை பாக்கியம்
(11 Dec 1933 - 02 Oct 2024)

Age: 90 years old  |  Death Place: Canada  |  Birth place: velanai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா-Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜதுரை பாக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா…
ஒரு ஆண்டாகியும் உம் பிரிவு நெஞ்சை நொந்தே நிற்கிறது,
உம்மின்றி வாழும் ஒவ்வொரு நாளும்
கண்களில் கண்ணீராய் உருகுகிறது.

பாசமிகு சொற்கள் இன்றும் காதில் ஒலிக்க,
அன்பான சிரிப்பு இதயத்தில் ஒளிர்கிறது.
உங்கள் கரம் இல்லாத வெற்றிடத்தில்,
நாங்கள் தேடும் நிழல் இன்னும் நீங்கள்

உங்கள் வாழ்வு எங்களுக்கு ஒரு பாடம்,
உங்கள் பாசம் எங்களுக்கென்றே ஓர் அரணாகம்.
நினைவின் வழி எம்மை வழிநடத்தி,
ஆசிகளால் எம்மை காக்கின்றீர் என்றும்.

அம்மா…
நீங்கள் பிரிந்தாலும் மறையாத ஒளி,
எம் வாழ்வில் என்றும் நிலைத்த பாசமே நீங்கள்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம்


bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.