Ownstory Tamil

Age: 71 years old | Death Place: Canada | Birth place: Thualai,Jaffna

Age: 71 years old | Death Place: Canada | Birth place: Thualai,Jaffna
Thualai,Jaffna, Canada
யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough ஐ வசிப்பிடமகாவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களின் தோளில் சாய்ந்திருந்த நாட்கள் –
அது ஒரு வசந்தம்,
மீண்டும் வராத ஒரு பொற்காலம்;
அன்றைய மழையில் நனைந்தபோதும்,
அனல் வீசும் கோடையிலும்,
நீங்கள் தந்த அணைப்பு ஒரு பாதுகாப்பு அரண்.
சிறுபிள்ளைத் தனமாய் நான்
சிந்திய கண்ணீர்த் துளிகளையும் நீங்கள் துடைத்தீர்கள்;
வளர்ந்த பின் நான் சோர்வுற்றபோது,
விடியலை நோக்கிப் போகும்
பாதையை மட்டும் சுட்டிக் காட்டினீர்கள்.
வெற்றியைக் கொண்டாட நீங்கள்
அருகில் இருந்தீர்கள்; தோல்வியின் போதோ
தளர்ந்து போகாதே என்று தாங்கிப் பிடித்தீர்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!