Ownstory Tamil
Age: 72 years old | Death Place: United Kingdom | Birth place: Urumbirai
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா Guildford Surrey ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா… எம் உயிரின் ஆதரவே,
அன்பின் கருவே, வாழ்வின் ஒளியே,
ஆறாம் ஆண்டும் உங்கள் நினைவு அழியவில்லை,
எம் நெஞ்சில் என்றும் நீங்கள் நிலைத்து நிற்கின்றாய்…
உழைப்பின் சின்னம், பொறுமையின் வடிவு,
உண்மையின் பாதை, அன்பின் பெருங்கடல்,
உங்கள் வாழ்வு எமக்கோர் வழிகாட்டுதலாய்
இன்றும் என்றும் ஒளிவீசுகின்றதே…
சிரித்த முகம் கண்முன் நிற்க,
சிந்தை நிறைந்த சொற்கள் காதில் ஒலிக்க,
நீங்கள் விட்டுச் சென்ற அருமை போதனைகள்
எம் வாழ்வின் பாதை வெளிச்சமாய் திகழ்கின்றன…
காலம் நகர்ந்தாலும் கண்ணீர் தணியவில்லை,
நினைவு மங்காமல் நெஞ்சம் உருகுகின்றதே,
ஆறாம் ஆண்டும் உயிரே அப்பா,
உங்கள் அன்பே எம் வாழ்வின் அழியாத செல்வம்…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!